மாய நிலம் - 1
மாய நிலம் – 1
மேகவெடிப்பு .
அடைமழை ஓய்ந்தது . அங்கு
கர்பினியான அவளைத் தவிர யாரும் இல்லை. ஆதரவாக இருந்த அவள் கனவனும் இரண்டு நாள்களுக்கு முன்பு மேக வெடிப்பில் இறந்து போனான்.
மேக வெடிப்பு என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில் அரை மணி நேரத்தில் 5 செ.மீ முதல் 10 செ.மீ வரை குடத்தில் இருந்து தண்ணீரை கொட்டுவது போல பேய் மழை கொட்டுவது ஆகும்.
அழுது வற்றிப் போன கண்களுடன் மரத்தின் அடியில் மழைக்கு ஒதுங்கி இருந்தாள் . ஆனால் அவளின் விம்மல் நிற்கவில்லை.
மழை ஓய்ந்த நிசப்தம் எங்கும் பரவி இருந்தது . மரத்தின் அடியில் ஒரு துளி மழையும் விழவில்லை ஆனால் இலைத் துளிகள் கூட இல்லையே ? அது அவளுக்கு வியப்பாக இருந்தது.
மழை ஓய்ந்த நிசப்தம் எங்கும் பரவி இருந்தது . மரத்தின் அடியில் ஒரு துளி மழையும் விழவில்லை ஆனால் இலைத் துளிகள் கூட இல்லையே ? அது அவளுக்கு வியப்பாக இருந்தது.
அவளுடைய விம்மலை நெடுநேரமாய் கவனித்த மரம் அவளிடம் பேச்சுக் கொடுத்தது . அவளின் துயர கதையைக் கேட்ட மரம் பரிதாபப்பட்டு வருந்தியது . மரத்தில் அமர்ந்து இருந்த ஒரு குயிலும் எல்லாவற்றையும் கேடடுக்கொண்டு இருந்தது.
குயில் கீழே இறங்கி வந்து அவளோடு பேசியது . "இந்த மழை நாளில் இனி எங்கு எப்படி போகவதென்று தெரியவில்லையே" என சொல்லி அழ ஆரம்பித்தாள் .
" கவலைப்படாதே , எவ்வளவு மழை பெய்தாலும் நீ நனையாமல் இருக்க நான் உதவுகிறேன் " என்றது குயில்.
குயிலை அமைதியாகப் பார்த்தாள் . அவள் பார்வையைப் புரிந்து கொண்ட குயில் தன் கதையைச் சொல்லத் தொடங்கியது.
நான் பிறந்த சில நாளிலேயே என்னை அடைகாத்த காகம் என்னை வேறு பறவை என அடையாளம் கண்டுவிட்டது . தத்திப் பறந்ததும் என்னைக் கொத்த துடித்தது . அதனிடம் இருந்து தப்பிக்க நான் எவ்வளவோ போராடினேன் . என் இளம் சிறகில் இருந்த முழு வலிமையையும் கூட்டிப் பறந்து பார்த்தேன் என்னால் முடியாத சூழலில் ஒரு பாட்டி சுமந்து சென்ற விறகு கட்டில் மயங்கி விழுந்தேன்.
பாட்டியும் நான் இருந்தது தெரியாமல் என்னை வீட்டிற்கு சுமந்து சென்றாள். அடைகாத்த காகத்தோடு இன்னும் பல காகங்கள் சேர்ந்து பின் தொடர்ந்து வந்தன.
வீடு வந்ததும் விறகுகட்டை கீழே போட்டாள். விறகு குத்தி அலறி மீண்டும் மயங்கினேன். என் அலறல் குரல் கேட்டு ஓடி வந்த பாட்டியின் கணவர், மேலே பறந்த காகங்களைப் பார்த்து விறகின் அடியில் நான் செத்து கிடப்பதாக பதறிப் போய் , விறகைப் போட்டு என்னைக் கொன்றதாக பாட்டியின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார் . வயதான பாட்டி கீழே விழுந்து செத்துப் போனாள் .
அழுதபடியே பாட்டியோடு என்னையும் சேர்த்து எரிக்க விறகோடு தீ வைத்தார். சூடு தாங்காமல் அலறி பறந்தேன் நான்.
பறவை இறந்ததாக தப்பாக நினைத்து பாட்டியைக் கொன்று விட்டதாக அழுது புரண்டார் . எப்படியாவது பாட்டியைக் உயிர்ப்பிக்க முடியாதா என மேலே பறந்து கொண்டிருந்த காகங்களிடம் கேட்டார்.
காகங்கள் எல்லாம் சேர்ந்து தாத்தாவை நெருப்புக்கு மேலே
தூக்கி தாத்தாவின் கண்ணீரால் நெருப்பை அனைக்க முயன்றன.
அந்த வழியே மேலே சென்ற மேகங்கள் கீழே இறங்கி வந்து நடந்ததைக் கேட்டன. கிழவனுக்காக தாங்களும் உதவுவதாக பெருமழை பொழிந்தன. நெருப்பு அனைந்தது. கிழவனை கீழே இறக்கி விட்டன .
பாட்டியின் உயிரை மீட்க முடியாத கிழவன் அழுது கொண்டே இருந்தான் . கிழவனுக்காக மேகங்களும் வருந்தின.
வயதான மேகம் ஒன்று கிழவன் அருகே வந்தது வரும் வழியில் ஒரு அதிசய மரத்தைப் பார்த்ததாக கூறியது.
posted by பூவிதழ் @ May 22, 2018
0 Comments


0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home