லிட்டுவின் நூல் கண்டு - 1
லிட்டுவின் நூல் கண்டு - 1
உலகம் எந்த இடத்தில் தொடங்குகிறது ? எங்கே முடிகிறது? ,,, என்று அறிந்து கொள்ள ஆர்வமாக இருந்தான் லிட்டு .
யாரிடம் கேட்டால் விடை கிடைக்கும் என்று சிந்தித்தபடியே நடந்தான் . எதிரே மெக்கலன் தாத்தா நடந்து வந்தார் . அவரு தான் இந்த உலகத்தையே முதன் முதலில் சுற்றி வந்ததா எல்லோரும் பேசிக்கிறாங்க.
அவரிடம் ,
"தாத்தா இந்த உலகம் எந்த இடத்தில் தொடங்குது ? எங்கே முடியுது? என கேட்டான் .
"இதோ இந்த நூல் கண்டை வச்சுக்கோ இது அதிசய நூல்கண்டு ,உருட்டி விடு, இது எங்கு முடிகிறதோ அந்த இடத்தில் உலகம் முடிந்துவிடும் ,முடிகிற இடத்தின் எதிர் திசையில் உலகம் தொடங்கிவிடும்".
- என்று கூறியபடி வேப்ப மரத்தின் அடியில் அமர்ந்தார் மெக்கலன் தாத்தா.
லிட்டு , நுனியைப் பிடித்துக் கொண்டு ஊதா நிறத்தில் இருந்த நூல் கண்டை உருட்டி விட்டான், அது வேகமாக உருண்டு ஓடியது . அவன் முயல் குட்டியைப் போல அதன் பின்னால் குதித்து ஓடினான் .அது இறுதியில் ஒரு வறண்ட நிலப்பகுதியில் உருண்டு சென்று ஓர் எலியின் வளையில் விழுந்து உள்ளே சென்றது.
"உள்ளே யாரு இருக்கீங்க உங்க வளைக்குள்ளே என் நூல்கண்டு விழுந்துருச்சி " என்று கூப்பிட்டான் லிட்டு .
உள்ளே இருந்து ஒரு பெரிய எலி வந்தது. கழுத்துப் பகுதியில் வயிற்றுப் பகுதியில் வெள்ளை நிறமுடைய ஓர் ஆசிய எலி இனம் அது.
"நான் உலகத்தின் ஆதியும் அந்தமும் தேடிட்டுப் போகிறேன் அதைக் கண்டு பிடிக்க உதவும் அதிசய நூல் கண்டு உன் வளையில் விழுந்துவிட்டது எடுத்துத் தர வேண்டும்" என்று அன்பாகக் கேட்டான் விட்டு .
"தவறுக்காக வருந்துகிறேன் என்னுடைய எலிக் குஞ்சுகள் நூல் கண்டைக் கடித்து விளையாடிவிட்டன , அதைப் போலவே வேறு ஒரு நூல் கண்டு தருகிறேன்" என்று கூறி உள்ளே சென்றது எலி . சிறிது நேரம் கழித்து வெளியே வந்து கருநீல நிற நூல் கண்டைத் தந்தது .
நூல் கண்டை வாங்கிய லிட்டு சிறிது யோசனைக்குப் பின் , மீண்டும் உருட்டுவதைத் தவிர வேறு வழியில்லை என அதன் நுனியைக் கையில் வைத்துக் கொண்டு உருட்டி விட்டான். அது வேகமாக உருண்டு ஓடியது.
உருண்டு உருண்டு ஓடிய நூல்கண்டு இறுதியில் ஒரு புலியின் குகையின் உள்ளே சென்று விட்டது . அது தென் அமெரிக்காவின் பொலிவியா காடு .
"உள்ளே யாரு இருக்கீங்க கொஞ்சம் வெளியே வாங்க" , என்று உரத்துக் கூப்பிட்டான் லிட்டு
ஒரு புலி வெளியே வந்தது .அதன் கம்பீரம் லிட்டுவுக்கு கொஞ்சம் பயத்தைத் தந்தது. ஆனாலும் உலகின் ஆதியும் அந்தமும் தேடும் அவன் இலக்கு மட்டுமே அவனுக்குப் பெரியதாகத் தெரிந்தது. எனவே வந்த காரணத்தைச் சொன்னான் .
" நான் உலகத்தின் ஆதியும் அந்தமும் தேடிக் கொண்டு போகிறேன் அதனைக் கண்டு பிடிக்க உதவும் நூல் கண்டு உங்கள் குகையின் உள்ளே வந்து விட்டது அதை எடுத்துத் தந்தால் எனக்கு பெரும் உதவியாக இருக்கும்" .
புலி உள்ளே சென்று திரும்பும் போது வெறுங்கையுடன் வந்தது .
"எங்கே என் நூல் கண்டு " ? என ஆர்வமாக கேட்டான் லிட்டு.
புலி கொஞ்ச நேரம் அமைதியாக நின்றது . அதன் புலிப் பறழ் (புலிக்குட்டி) நூல் கண்டை வாயில் கடித்தபடி வெளியே வந்தது . அதுதான் தான் பின் தொடர்ந்த நூல் கண்டு என தெரிந்து கொண்டான் .
உள்ளே இன்னும் புலிகளும் புலிப்பறழ்களும் (புலிக்குட்டிகளும்) இருப்பது தெரிந்தது .
லிட்டுவை நீண்ட நேரம் பதில் சொல்லி காக்க வைக்க விரும்பாத புலி உள்ளே சென்று நீல நிற (BLUE) நூல்கண்டைக் கொண்டு வந்து கொடுத்தது .
லிட்டு சிறிது நேரம் கூட தாமதிக்காமல் நூலின் நுனியைப் பிடித்துக் கொண்டு உருட்டினான் . அதன் வேகம் முன்பை விட மிக அதிகமாக இருந்தது .
இப்போது நூல் கண்டு ஆப்பிரிக்க காடுகளின் வழியே உருண்டு சென்றது இவனுடைய வேகம் அதிகமாக மாறியது. காடு முழுவதும் எவ்வளவு விலங்குகள் வரிக்குதிரைகள் எருமைகள் மான்கள் புலி, சிங்கம் இன்னும் பல சிறிய விலங்குகள் என பல ஆயிரம் திரிந்தன .
நூல்கண்டு ஏதேனும் எளியே விலங்குகளின் அருகே செல்லாமல் அங்கு நின்ற ஒரு யானையின் கால்களுக்கு இடையில் சுற்றிக் கொண்டது. அங்கு யானை தன் கன்றோடு (குட்டி) உலவியபடி இருந்தது.
யானைகள் தனித்து இருக்கும் போது உண்டாகும் அச்சத்தை விட அவை தான் குட்டிகளுடன் இருக்கும் போது தான் அதிகம் ஏனெனில் அத்ததைய சூழல்களில் யானைகள் அதிக மூர்க்கமாக தாக்கும் .
லிட்டு கொஞ்ச நேரம் பொறுமையாக நின்று அவற்றின் செயல்களை கவனித்தான் . பிறகு அச்சமின்றி
"நான் உலகத்தின் ஆதியும் அந்தமும் தேடிக் கொண்டு போகிறேன் அதனைக் கண்டு பிடிக்க உதவும் நூல் கண்டு உன் கால்களில் மாட்டிக் கொண்டு உள்ளது . அதனை எடுத்துத் தந்தால் என் பயணத்திற்கு பெரும் உதவியாக இருக்கும் " .என்று கேட்டான் .
புதியதாய் ஒரு குரலைக் கேட்ட பெரிய யானை சற்று தடுமாறியது அதனால் நூல் கண்டு கால்களில் மாட்டிக் கொண்டது.
லிட்டுவுக்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் திகைத்த யானை ஒரு மூங்கில் மரத்திலிருந்து பச்சை நிற ( GREEN) நூல்கண்டை எடுத்துக் கொடுத்தது
தொடரும்......... அடுத்தப் பகுதி
https://poovithalumesh.blogspot.in/2018/04/2.html?m=1
posted by பூவிதழ் @ April 12, 2018
4 Comments

4 Comments:
இந்த பச்சை நிற நூல் கண்டும் இன்னும் உள்ள மஞ்சள் ஆரஞ்சு சிவப்பு நிற நூல் கண்டுகளும் நாட்டிற்குள் வாராமல் இதேபோல காட்டினூடாகவும் ஆழ்கடலினூடாகவுமே பயணிக்கட்டும்.
அருமை வாழ்த்துகள்
மகிழ்ச்சி
தோழர்களே
அந்த நூல்கண்டுகளை தயாரித்த தொழிற்சாலை ஒன்றுதானே?!!
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home