லிட்டுவின் நூல்கண்டு - 3
லிட்டுவின் நூல்கண்டு - 3
கண்ணை மூடி திறப்பதற்குள் நூல் கண்டு ஆஸ்திரேலியாவின் ஒரு சமவெளியில் உருண்டது . பழங்குடியினரின் எல்லா அடையாளங்களும் அழிவுக்கு உள்ளாகி வரும் இச்சூழலில் அவர்கள் பயன்படுத்திய சொல்தான் கங்காரு என்று நாம் அழைக்கும் அந்த விலங்குக்கு பெயராகி இருப்பது வியப்புதான் .
கங்காருகள் தாவி குதிப்பதில் மற்ற எந்த விலங்கைக் காட்டிலும் சிறப்பாக செயல்படும் . ஒரு பெரிய கங்காரு நூல்கண்டின் ஆரஞ்சு நிறத்தில் மயங்கி அதை ஆர்வமாக எடுத்தபடி தாவ நூல் கண்டு நீர் நிறைந்த குளத்தில் விழுந்தது.
லிட்டுவின் திகைப்பைப் பார்த்த கங்காரு அவனிடம் வந்தது. அதன் அமைதி ஏதோ கேட்பது போல இருந்தது.
"நான் உலகத்தின் ஆதியும் அந்தமும் தேடிக் கொண்டு போகிறேன் . அதனைக் கண்டு பிடிக்க உதவும் நூல் கண்டை தான் நீ தாவும் போது குளத்தில் தள்ளி விட்டாய் அது திரும்ப கிடைத்தால் என் பயணத்திற்கு பெரும் உதவியாக இருக்கும் " என்று பெருமூச்சு விட்டபடி லிட்டு கேட்டான் .
கங்காரு தன் குட்டிகளை சுமக்கும் அடி வயிற்றின் பையில் இருந்து சிவப்பு நிற நூல் கண்டைத் தந்தது சிட்னியின் கடற்கரை சாயும் அந்தியில் விளக்குகளால் ஒளிரத் தொடங்கியது அதை இரசித்தபடியே நூல் கண்டை உருட்டி விட்டான் சிவப்பு நூல் கண்டின் வேகம் ஒலியின் வேகத்தை விட மிக அதிகமாக இருந்தது . நூல் கண்டு கடைசியாக நின்ற இடத்தை அடைந்த போது லிட்டு மிகவும் களைத்துப் போய் இருந்தான் . என்ன அதிசயம் அது மெக்கலன் தாத்தா காலடியில் வந்து நின்றது .
மெக்கலன் தாத்தா சிவப்பு நிற நூல்கண்டைக் கையில் எடுத்தபடி
" லிட்டு " என்று கூப்பிட்டார்.
"தாத்தா நீங்க எப்படி இங்க வந்தீங்க? ஏதாவது மாயம் செஞ்சீங்களா?" என்று வியப்போடு கேட்டான் லிட்டு.
சிரித்தபடி தன் தாடியை ஒரு கையில் தடவியபடி மெக்கலன் தாத்தா கேட்டார் ,
" பூமியின் வடிவம் என்ன? "
" ஆரஞ்சு பழம் போன்ற கோள வடிவம்" என்று பதில் சொன்னான் லிட்டு.
"கோள வடிவம் உள்ள எந்தப் பொருளுக்கும் ஆதியும் இல்லை அந்தமும் இல்லை அதன் மேலே அமையும் எல்லா புள்ளியுமே மையம் தான் "
" அதனால் நீ நிற்கும் உன் காலடியில் தான் உலகின் ஆதியும் அந்தமும் உள்ளது" என்றார் .
"அப்படியா இதை முதலிலே செல்லி இருக்கலாமே தாத்தா "
"நான் எப்படி உலகத்தைச் சுற்றி வந்தேன் என உனக்குத் தெரிய வேண்டாமா ? அதான் உனக்கு முதலிலேயே சொல்லவில்லை" என்றார்.
லிட்டுவுக்கு ரொம்ப மகிழ்ச்சி தனது கேள்விக்கு விடை கிடைத்தற்கு . அந்த அதிசய நூல்கண்டு இல்லை எனில் தன்னால் உலகத்தை இவ்வளவு எளிதாகச் சுற்றி இருக்க முடியாது என்று மகிழ்ச்சி அடைந்தான் .
" உலகத்தைச் சுற்றிய அதிசய சிறுவன் லிட்டு " என, தாத்தா சொன்னதும் லிட்டுவின் மகிழ்ச்சி வானை முட்டியது. லிட்டு ஒவ்வொரு காலடியையும் பூமியின் ஆதியிலும் அந்தத் திலும் வைத்தபடி வீடிற்கு ஓடினான்.
.
posted by பூவிதழ் @ April 12, 2018
0 Comments


0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home