மாய | நிலம்
எறும்புகள் உலகம் உருவான நாளில் ஒரு காட்டுப்பன்றி அளவில் இருந்தன . நமது கதை நிகழும் காலத்தில் தான் உருவத்தில் சிறியதாக உருமாற்றம் அடைந்தது. இன்றும் சில பெரிய எறும்புகள் காட்டுப்பன்றி போல ஆள் அரவம் நுழையாத காடுகளில் இருப்பதாக நம்புகிறார்கள்.
எறும்புகள் பூமியில் பெரிய துளையிட்டு பெரிய எறும்பு புற்றுகளில் வாழ்ந்தன. கிடைக்கும் தானியங்களையும் தம் வளை போன்ற புற்றுகளில் விழும் விலங்குகளையும் உண்டு வாழ்ந்தன.
ஒரு நாள் அந்த வழியே யானைக் கூட்டம் ஒன்று வந்தது. அதில் பல யானை குட்டிகளும் (கன்று) இருந்தன. ஒரு குறும்புக்கார யானைக் குட்டி தாறுமாறாக வந்து எறும்பு புற்றினுள் விழுந்துவிட்டது. எறும்பு புற்றில் மூச்சு முட்டியது கால்கள் எல்லாம் மடங்கி கொண்டன சிறிது நேரத்தில் யானைக் கன்று (குட்டி) செத்துப் போனது. இதனை அறிந்த யானைக் கூட்டம் கோபத்தில் எறும்பு புற்றை மிதித்து அழித்தது. வெளியே வந்த பல எறும்புகளை மிதித்து கொன்றன. இதைச் சற்றும் எதிர்பாராத எறும்புகள் அதிர்ச்சியில் உறைந்து போய் பயத்தில் நடுங்கி மிகச் சிறியதாக மாறின.
ஆனாலும் யானைகளின் கோபம் தீரவில்லை. யானைக் (குட்டிக்கு) கன்றுக்கு உயிர் கொடுத்து விட்டால் யானைகளின் கோபத்தில் இருந்து எறும்பு இனத்தையே காப்பாற்றலாம் மேலும் பயத்தில் சிறியதாகிப் போன எறும்புகளின் பழைய உருவத்தைப் பெறலாம் என்று வந்து , சிவப்புப் பாறை மீது இருக்கும் எறும்பின் கதையை மரம் கூறியது.
இந்தக் கதையைக் கேட்ட மேகங்களில் பெரிய மேகம் ஒன்று எறும்பிடம் பேசுவதற்கு அருகில் நெருங்கி சென்றது ஆனால் எறும்பு முகத்தைத் திருப்பிக் கொண்டது.
மேகம் தன் முயற்சியில் பின் வங்க தயாராக இல்லை . எப்படியாவது பாட்டியின் உயிரை மீட்க வேண்டும் - சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேண்டும் என உறுதியாக இந்தது.
நீண்ட அமைதிக்குப் பின் எறும்பு பேசியது.
" மேகங்கள் தான் எங்கள் இனத்தை அதிகம் அழிக்கின்றன . புற்றுகளில் பாயும் மழை வெள்ளத்தால் எண்ணிக்கை இல்லாமல் எறும்புகள் அழிகின்றன. எங்களின் பல மடங்கு உழைப்பு அழிகிறது. புற்றுகள் தான் முதலில் நிரம்புகிறது. இப்படி பட்ட உங்களுக்கு எப்படி நான் உதவ முடியும் ? " என எறும்பு வருத்தப்பட்டு கூறியது.
மேகம் , எறும்பின் பேச்சில் இருந்த வலியையும் வருத்தத்தையும் நியாயத்தையும் ஏற்றுக் கொண்டது.
மரத்தின் இலையில் இருக்கும் உயிரைத் தந்தால் , அதற்கு பதிலாக மழை பெய்வதற்கு முன்பாகவே மழை வருவது பற்றி அறியும் ஆற்றலைத் தருவதாகக் கூறின. இதைக் கேட்ட எறும்பு இல்லையில் உள்ள உயிரைத் தருவதாக ஒப்புக் கொண்டது. ஆனால் தங்கள் பழைய உருவத்தை எப்படி பெறுவது எனக் கேட்டது.
பூமியில் எந்த உயிரியும் அதன் உருவத்தை விட அதிக வலிமையாக இல்லை இப்போது நீங்கள் உங்கள் உருவத்தை விட வலிமையாக உள்ளதால் உருவத்தை மாற்றிக் கொள்ள வேண்டாம் என்றது மேகம்.
இதைக் கேட்ட எறும்பு யோசித்தது. மரமும் இதையே வலியுறுத்தியது. இறுதியில் எறும்பு ஒத்துக் கொண்டது. உருவை விட திரு உயர்ந்ததாய் எறும்பு திரும்பி சென்றது.
மரத்தின் இலையைப் பெற்றுக் கொண்டு மேகங்கள் விரைந்து சென்றன. போன வேகத்திலேயே கிழவியின் மீது இலையைப் போர்த்தின . காம்புப் பகுதி கழுத்திலும் இலையின் முழுப்பகுதி மார்பிலும் இருக்கும் படியாக பார்த்துக் கொண்டன.
கிழவியின் இமைகள் மெல்ல அசைந்தது. உயிர் பெற்று எழுந்தாள். காகங்கள் மேகங்கள் எல்லாமே மகிழ்ச்சி அடைந்தன ஆனால் மழையில் நனைந்து நடுங்கி துடித்துக் கொண்டு இருந்த குயிலை மறந்து விட்டன. திடீரென்று குயிலின் நிலையைப் பார்த்து பதறிப் போன மேகங்கள் வருந்தின .
மரத்தில் அமர்ந்து இருந்த காகங்களை அழைத்து சுள்ளிகளைச் சேர்த்துத் தீ மூட்டினான் கிழவன் கதகதப்பில் குயில் மெல்ல கண் விழித்தது.
அருகில் சென்ற மேகங்கள் தங்களை மன்னிக்கும்படி கேட்டன. இனி எப்போதும் மழையில் நனையாத வரம் ஒன்றைக் கொடுப்பதாகவும் அதை யாரிடமாவது சொன்னால் அது கேட்பவரிடம் சென்று விடும் எனக் கூறி சென்றன.
இதன் பிறகு குயில் இருக்கும் இடத்தைச் சுற்றி மட்டும் மழைப் பெய்யாமல் இருக்கும் அதனால் தான் நாம் இருக்கும் இடத்தில் ஒரு துளி மழையும் விழவில்லை எனக் கூறியது குயில். பிறகு அவள் காதில் அந்த வரத்தைக் சொல்லி பறந்தது.
வானம் அப்போது தூறல் போட்டபடி இருந்தது. அவள் நடந்த போதும் அவள் மீது ஒரு துளியும் விழவில்லை. சிறிது தூரத்திலேயே பிரசவ வலி அதிகமானது.
posted by பூவிதழ் @ June 13, 2018
0 Comments

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home