Friday, 21 February 2020

வெயில் ஒளிந்து கொள்ளும் அழகி



சமகால கவிதை நூல்கள் பற்றி -  மெளனன் யாத்ரிகா  - அவர்கள் எழுதும் தொடர் . 

சமகாலத்தைப் பொருட்படுத்துவேன்
_____________________________________

3.
நூல்-வெயில் ஒளிந்து கொள்ளும் அழகி
கவிஞர்- பூவிதழ் உமேஷ்

சென்ற மாதத்தில் ஒருநாள்  லேசாக வெக்கை ஏறிய ஒரு மதியப் பொழுதில் நண்பர்  அகரமுதல்வனிடம் இருந்து மெசஞ்சரில் ஓர் அழைப்பு வந்தது. இலக்கியம் குறித்து கொஞ்சம் உரையாடிய பிறகு, பேச்சின் ஊடாக சமகால கவிதைகள் குறித்துப் பேசினோம்.

அவருக்கு நெருக்கமான கவிஞர்கள் குறித்தும் கவிதைகள் குறித்தும் பேசிக் கொண்டிருந்தவர் அண்மையில் ஒரு கவிதைத் தொகுப்பு வந்திருக்கிறது, ரொம்ப பிரமாதமாக எழுதப்பட்டிருக்கிறது  என்றார்.
என்னால் சட்டென்று அவதானிக்க முடியவில்லை. யாருடைய தொகுப்பாக இருக்கும் என்று நான் யோசித்துக் கொண்டிருக்கும் போது,
பூவிதழ் உமேஷ் என்பவருடைய 'வெயில் ஒளிந்து கொள்ளும் அழகி' என்றார்.

அகரமுதல்வனுடைய வாசிப்பு  ரொம்ப ஆழமானது என்று எனக்கு தெரியும். வாய்ப்பிருந்தால் என்னுடைய 'நொதுமலர் கன்னி' குறித்து அவர் பேசிய நிகழ்வின் வீடியோ பதிவைக் கொஞ்சம் கேட்டுப் பாருங்கள். ஒரு தேர்ந்த வாசகன் ஒரு நூலை எப்படி அணுகுவான் என்பதற்கு அந்தப் பேச்சு அருமையான உதாரணமாக இருக்கும்.

என்னைக் குறித்தும், அகரமுதல்வன் குறித்தும் பேசுவதற்காக இந்த விஷயத்தை நான் சொல்லவில்லை. பூவிதழ் உமேஷின்  கவிதைகள் குறித்து பேசவே இந்த சின்ன அறிமுகம்.

பூவிதழ் உமேஷின்  மொழி, அவர் கவிதைகள் பேசும் தொனி, அவர் தேர்ந்து கொண்ட உள்ளடக்கம், அவருடைய கவிதை நிகழும் காலம்... இப்படி பல விஷயங்களை அந்தத் தொகுப்பை முன் வைத்துப்  பேசினார். எனக்கு உண்மையில் ஆவல் தொற்றிக்கொண்டது. உடனே வெயில் ஒளிந்து கொள்ளும் அழகியைப் படிக்க வேண்டும் என நினைத்தேன்.  அதற்கான வாய்ப்பு சட்டென அமையவில்லை. 

ஒருநாள் பூவிதழ் உமேஷிடமிருந்து ஒரு போன். அண்ணா உங்கள் முகவரி கொடுங்கள் என்று. கொடுத்தேன். இரண்டொரு நாளில் வெயில் ஒளிந்துகொள்ளும் அழகி என் வீட்டிற்கு வந்துவிட்டாள். வந்த நாளிலிருந்து அந்த அழகியை என் ஜோல்னா பையில் வைத்துக்கொண்டு அலைகிறேன்.

ஆயிரம் கற்களைத் தாவி ஏறி மலை உச்சியில் இருக்கும்  ஒரு மரத்தில், அதன் நிழலில்  இளைப்பாற அமர்வது போல ரொம்ப கடுமையான வாசிப்பனுபவத்தைக் கோருகிறது இந்த நூல். அதிகம் குழந்தைகள் உலாவும் ஒரு மைதானம் போல் தெரிந்தாலும்,  மைதானம் இருப்பது என்னவோ மலையுச்சியில்.  அங்கு போய் விளையாடுவது என்பது ஒரு அசகாய சூர பயணம். நம்மை அந்த சாகச விளையாட்டுக்குத்தான் அழைக்கிறார் பூவிதழ்.

முதல்கட்ட வாசகன், வளர்ந்து வரும் வாசகன், தீவிர வாசகன், யோகநிலையை எட்டிவிட்ட வாசகன் என்று  வாசக பரப்பில் பல வாசகப் படிநிலைகள் இருக்கின்றன. இந்த நூல் முதல்கட்ட வாசகனை அடிவாரத்திலேயே தயங்கி நிற்க வைத்து விடுகிறது.

கவிதையின், அது பேசும் மொழியின் , அதன் உள்ளடக்கத்தின்  செறிவு ரொம்ப அடர்த்தியானதாக இருக்கிறது. தேர்ந்த வாசகன் அல்லது தீவிர வாசகனே மலை ஏற முடியும். அவ்வளவு அடர்த்தியான மொழி, உயரமான சொல்முறை.

நான் ஒருவார காலமாக தொடர்ச்சியாக வாசித்துக் கொண்டிருக்கிறேன். பூவிதழ் உமேஷின் இந்தத் தொகுப்பு ஒரு மலையேற்றத்தை எனக்கு ஞாபகப்படுத்துகிறது. என்னுடைய வாசிப்பு அனுபவத்தில் கவிதை குறித்து நான் புரிந்து வைத்திருப்பது, 'யாரும் தொட முடியாத, யாரும் அணுக முடியாத  வாழ்வையும் பொருளையும் நெருக்கமாக அவதானிப்பது.  அது இந்தத் தொகுப்பில் சாத்தியமாகியிருக்கிறது. நிறைய கவிதைகளை இந்நூலில் இருந்து உதாரணம் காட்ட முடியும்.  அந்த வாய்ப்பை வாசகர்களுக்கே நான் கொடுத்துவிட விரும்புகிறேன்.

நன்றி:  கவிஞர்  மெளனன் யாத்ரிகா 
( பாணர் வகையறா , புத்தர் வைத்திருந்த தானியம், நொது மலர்க் கன்னி உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர் இவருடைய நூல்கள் வாசகசாலை , தாழ்வாரம் ஆகிய அமைப்புகளின் விருதுகளைப் பெற்றுள்ளன. )

Sunday, 24 November 2019

சிரிக்கத் தெரிந்த பூனை

சிரிக்கத் தெரிந்த பூனை

 சுவற்றின் மீது ஏறி பூனைகள் விளையாடிக்கொண்டிருந்தன.  அந்த வழியாகச் சென்ற வழிப்போக்கர்களில் ஒருவன் தன் நண்பனிடம் வானத்தில் ஒரு பெரிய ஓட்டை போட்டு அதன் வழியாக வெளியேறி விட்டால் வேறொரு உலகத்திற்குச் சென்று விடலாம் என்று சொன்னான். அதைக்கேட்ட அவனுடைய நண்பன், அது வேறொரு உலகம் இல்லை அதுதான்  சொர்க்கம்  என்று பதில் சொன்னான்.

  சுவரின் மீது விளையாடிக் கொண்டிருந்த பூனைகளில் இருந்த வெள்ளைப் பூனை இருவரின் உரையாடலைக் கேட்டு,  கலகலவென சிரித்தது. பிறகு "சொர்க்கம்  என்பது மேலேயும் இல்லை கீழேயும் இல்லை.  நீங்க இருக்கிற இடம் தான் சொர்க்கம் "  என்று சொல்லி மீண்டும்  சிரித்தது. 
 
  பூனை சிரிப்பதைப் பார்த்து அவர்களுக்கு வியப்பாக இருந்தது. ஆனாலும்  அந்தப் பூனை, தங்களைப் பார்த்து கேலியாகத்தான் சிரிக்கிறது என்று எண்ணி கோவப்பட்டார்கள். அதனால் பூனையைப் பிடித்துக் கொண்டு சென்று அருகில் இருந்த காவலரிடம் ஒப்படைத்து, நடந்ததைச் சொன்னார்கள்.

  காவல்காரன் "சிரிக்கத் தெரிந்த பூனையா ? " என்று வியப்போடு பார்த்தான்.  பூனைகள் சிரிப்பதைப் பற்றி நான் கேள்வி பட்டதில்லை , பூனைகள் சிரிக்க சட்டத்தில் இடம் இருக்கா என்று விசாரிக்க வேண்டும்,  விலங்குகள் மனிதர்களைப் பார்த்து சிரிப்பது சட்டப்படி குற்றம்  எனவே இந்த பூனைக்குச் சரியாக தண்டனையை நான் வாங்கித் தருகிறேன் என்று அவர்களிடம் காவல்காரன் சொன்னான். அப்போதும் பூனை சிரித்தது.

   காவலருக்குக் கோபம் வந்துவிட்டது " இந்தப் பூனைக்கு அதிகபட்ச தண்டனை தரும் அதிகாரம் தன்னிடம் இல்லை" என்று கூறி அதிக தண்டனை வாங்கித் தருவதற்காக மந்திரியிடம் பூனையை பிடித்துச் வரச் சென்றான்.


  அங்கு மந்திரி "மூன்று தலை முடிகள் நேராக நின்றாலே போதும் அவன் பெரிய அறிவாளியாக இருப்பான் அதனால் இந்த நாடு முழுவதும் தேடி அப்படி ஒரு அறிவாளியைக் கண்டு பிடித்து  வர வேண்டும்" என காவலர்களுக்குக் கட்டளை பிறப்பித்துக் கொண்டிருந்தார்.

  " மூன்று  முடி மட்டும் அல்ல எத்தனை முடி நேராக இருந்தாலும் அறிவாளியாக இருப்பான் என்று சொல்ல முடியாது" என்று கூறி அங்கேயும் பூனை கலகலவென சிரித்தது.

  மந்திரியின் எதிரில் சாதாரண மக்கள் சிரித்தாலே தண்டனைக்குரிய குற்றமாகும் அப்படி இருக்கும் போது,  ஒரு பூனை சிரித்தது மந்திரிக்குக் கடுமையான கோபத்தை வரவழைத்து விட்டது. இதனால் பூனைக்கு மரண தண்டனை வாங்கித்தர வேண்டும் என்று முடிவு செய்து அரசரிடம்  கூட்டி சென்றார் . மேலும் சிரிக்கும் பூனை பற்றிய  இந்த இரகசியத்தை யாரிடமும் சொல்லக் கூடாது என மூன்று பேரிடமும் சொன்னார்.


  அதைக்கேட்ட பூனை ,  "ஒருவரிடம் சொல்லும் ரகசியமே நீண்டநாள் நீடிக்காது நீங்கள் மூன்று பேரிடம் ரகசியம் என்று சொல்லி இருக்கிறீர்கள் அது எத்தனை நாள் நீடிக்கும் என்று பார்ப்போம் " என்று கூறி கலகலவென சிரித்தது. இது மேலும் மேலும் மந்திரிக்கு கோபத்தை வரச் செய்தது. அதனால் உடனடியாகப் பூனையை அரசரிடம் அழைத்துச் சென்றார்.

  அரசர் வழக்கம் போல பல  நாடுகளைச் சுற்றிவிட்டு அன்றுதான் அரண்மனைக்கு வந்திருந்தார்.  மந்திரி பூனையோடு வருவதைப் பார்த்து, "பூனைகளைப் போல உலகத்தில் யாரும் முட்டாள் இல்லை, உலகம் தோன்றியதிலிருந்தே எலிகளை  மட்டுமே பிடித்து தின்று கொண்டிருக்கின்றன இதுவரை ஒரு  புலியைக் கூட  தின்றது இல்லை " என்று சொல்லி உரத்து சிரித்தார்.


    மந்திரி நடந்ததையெல்லாம் அரசரிடம் சொன்னார்.  அப்போதும் பூனை கலகலவென சிரித்தது.  அரசர்களின் முன்னால் உலகம் தோன்றியதிலிருந்தே இதுவரை எந்தப் பூனையும் சிரித்ததில்லை அதனால் அரசனுக்கு கடும் கோபம் வந்து விட்டது அதனால் விசாரனை ஏதும் இன்றியே பூனைக்கு மரணதண்டனை விதித்தான்.


   காவலர்கள் பூனைக்கு  மரண தண்டனை வழங்க தயாராகும் போது,  " மன்னா ஒரு நிமிடம் " என்று பூனை சொன்னது  , அரசனும் கொஞ்சம் பொறுங்க என்று காவலர்களுக்கு கட்டளையிட்டான்.


   தலையில் மூன்று முடி மட்டுமல்ல எத்தனை முடி நேராக இருந்தாலும் அவன் அறிவாளி என்று முடிவு செய்துவிட முடியாது என்று சொல்லி சிரித்தது.  அரசனுக்கு மந்திரியின் பேச்சை தன் முன்னாலேயே கேலி செய்வதைப் பார்த்து இன்னும் கடுமையாக கோபம் வந்துவிட்டது அதனால் பூனைக்கு மரண தண்டனையை உடனடியாக நிறைவேற்ற உறுதியாக இருந்தார்.


    இனி இந்த உலகில் இருக்கும் பூனைகளுக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும் என்று  அரசன்  சொன்னான். காவலர்கள் பூனைக்கு மரண தண்டனை நிறைவேற்ற வாளுடன் நின்றார்கள்.


   மூன்று முடி மட்டும் அல்ல எத்தனை முடி நேராக இருந்தாலும் அவன் அறிவாளி என்று சொல்ல முடியாது இதை நிரூபிக்க எனக்கு ஒரு வாரம்  அவகாசம் தந்தால் நான் நிரூபிப்பேன் பிறகு என்னை கொன்றுவிடுங்கள் என்று சொன்னது பூனை.


   அரசனும் சிரிக்கத் தெரிந்த பூனை இந்த உலகில் ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது எனவே அதனுடைய பேச்சையும் கேட்கலாம் என்று முடிவு செய்து தண்டனையை ஒரு வாரத்திற்கு தள்ளி வைப்பதாக அறிவித்தார்.  பிறகு பூனையிடம் எப்படி நிரூபிப்பாய் என்று கேட்டார் .


  அதை நிரூபிக்க மந்திரிக்கு மொட்டை அடிக்க வேண்டும் என்று பூனை சொன்னது. அரசரும் நீண்ட தயக்கத்திற்கு பிறகு ஒத்துக் கொண்டார்.  எளியவர்களின் குரலுக்கு ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் செவி கொடுப்பது தான் உலகின் மாபெரும் அதிசயம்.  பூனையின் வேண்டுகோளை ஏற்று மந்திரிக்கு மொட்டை அடித்தனர்.


  இந்த உலகத்தில் நடக்கும் ஏதேனும் ஒரு அதிசய செய்தியை யாருக்கும் முன்பாக என்னிடம் சொன்னால் உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லி இருந்த தன் காதலியிடம்  சிரிக்கும் பூனையைப் பற்றி காவலன் சொன்னான் . அவளும் தான் திருமணம் செய்யப் போகிறவனின் வீர பிரதாபங்களோடு இதையும் சேர்த்து தன் தோழிகளிடம் கூறி விட்டாள்.


   வழிப்போக்கர்களும் மீண்டும் பூனைகள் விளையாடிய இடத்திற்கே வந்து வேறு ஏதாவது பூனைகள் சிரிக்கிறதா என்று பார்க்க நெடு நேரமாய்க் காத்துக் கொண்டு இருந்தார்கள். அதனால் அவர்களைத் தேடி இருவரின் மனைவிகளும் அங்கு வந்தனர். ஆர்வக்கோளாரில் அவர்களும் தங்கள் மனைவிகளிடம் சிரிக்கும் பூனையைப் பற்றி இரகசியமாகச் காதில் சொல்லிவிட்டார்கள்.  இச்செய்தி அவரவர்களுக்குப் பிடித்தமானவர்களிடம் இரகசியம் என்றே பரவியது.


   நான்கு நாள் கழித்து அரசவை கூடியது மத்திரிகள், பூனை என அனைவரும் கூடினர். அரசர் பூனையை நீ சொன்னபடி  நிரூபி என்றார்.
மன்னா மந்திரியின் தலையில் இப்போது எல்லா முடிகளும் நேராகத் தான் உள்ளன அப்படி என்றால் அவர் அறிவாளியா என்று கேட்டது பூனை.


   இதிலென்ன சந்தேகம் அவர் அறிவாளிதான் என்றார் அரசர். என்னை இங்கு அழைத்து வரும் முன் இரகசியம் ஒன்றை  காக்கும் படி மூன்று பேரிடம் அவர் சொன்னார் . அது இன்று நாட்டில் உள்ள எல்லோருக்கும் தெரிந்துவிட்டது பல பேரிடம் சொல்வது எப்படி இரகசியம் ஆகும்- என்று கேட்டது பூனை.


  இது உண்மையா என மந்திரியிடம் அரசர் கேட்டார், பிறகு அந்த இரகசியம் காப்பாற்றபடவில்லை என்று எப்படி சொல்கிறாய் என்றார் அரசர்.


   என்னைப் (சிரிக்கும் பூனை) பற்றிய செய்தி " நாடு முழுவதும் பரவிவிட்டது என் சிரிப்பைப் பார்க்க ஆயிரக் கணக்கான மக்கள் அரண்மனை வாசலில் இந்நேரம் கூடி இயிருப்பார்கள் என்றது பூனை.

  காவலர்களை அனுப்பி பார்த்து வரச் சொன்னார் அரசர். மக்கள் கூட்டம் ஆரவாரத்தோடு அலைமோதியதை அறிந்த அரசர் பூனனயின் அறிவைக் கண்டு வியந்தார் . தன் அமைச்சரை விட பூனை அறிவாக இருந்தாலும் இனிமேல் பூனைகள் சிரிக்கக் கூடாது என்று கட்டளையிட்டார். பிறகு பூனையை விடுதலை செய்தார்.


   பூனை மனதுக்குள்ளே சிரித்துக் கொண்டு துள்ளி குதித்து ஓடியது. அதன் பிறகு அரசர் பூனைகளின் அறிவின் மீது பயம் கொண்டு பூனைகள் சிரிப்பதைத் கண்காணித்து தடுத்து தண்டனைத் தருவதற்கு ஒரு படையை நியமித்து தண்டமாக சம்பளம் கொடுத்தார்.


   
பிறகு  எல்லா  பூனைகளுமே யாருக்கும் தெரியாமல்  சிரிக்கக் கற்றுக் கொண்டன.  பூனைகள் அரசனின் மந்திரிகளின் முட்டாள்தனத்தைப் பார்த்து இன்று வரை மனதுக்குள்ளே சிரித்தபடியே தான் இருக்கின்றன.




Friday, 13 September 2019

வ் என்ற எழுத்தில் முடியும் குற்றியலுகரம் எது

வ் என்ற எழுத்தைத் தொடர்ந்து குற்றியலுகரம் வராது

Tuesday, 27 August 2019





" வெயில் ஒளிந்துகொள்ளும் அழகி" 
                     (கவிதைகள்)
                  பூவிதழ் உமேஷ்


ஆணென்கிற அகம்பாவமும் அதிகாரமும் தன்னியல்பாக மாறி அதற்கிசைவாகவே வாழ்ந்துவிட முடியுமென நம்பிக்கிடக்கும் ஒருவருக்கு இவற்றின் ஆயுள், ஒரு  பெண் அளிக்கும் மதிப்பைப் பொறுத்ததே என்பதை அறியும் கணத்தில் தன்னளவில் குறியறுத்து கதறும் நிலைக்கு ஆளாகிப்போகிறார். பெற்றோர், தம்பதியர், மகவுகள், நண்பர்கள், உறவினர் என்னும் பொதுப்பெயர்களுக்குள் இணக்கம் காணமுடியாத குணவியல்புகளோடு தத்தமது பாலின அடையாளத்தைக் காப்பாற்றிக்கொள்ளப் போராடும் எதிர்மைகளின்பொருட்டு சார்புநிலை எடுக்கவியலாமல் தத்தளிக்கும் நம்மை உமேஷ் எழுதிப்பார்த்திருக்கிறார்.

- ஆதவன் தீட்சண்யா
----------------------------------------------------------------------
💥 வெயில் ஒளிந்துகொள்ளும் அழகி
(கவிதைகள்)
✍ பூவிதழ் உமேஷ்

🔥 விலை: ₹ 80

🛒 ஆன்லைனில் வாங்க: https://bit.ly/2HbBlFi
➡ 𝐎𝐫𝐝𝐞𝐫 𝐭𝐡𝐫𝐨𝐮𝐠𝐡 𝐌𝐨𝐛𝐢𝐥𝐞: +𝟗𝟏 - 𝟖𝟕𝟓𝟒𝟓 06060
👉 𝐃𝐈𝐒𝐂𝐎𝐕𝐄𝐑𝐘 𝐁𝐎𝐎𝐊 𝐏𝐀𝐋𝐀𝐂𝐄, 𝐊𝐊 𝐍𝐚𝐠𝐚𝐫 𝐖𝐞𝐬𝐭,
(𝐍𝐞𝐚𝐫 𝐏𝐨𝐧𝐝𝐢𝐜𝐡𝐞𝐫𝐫𝐲 𝐆𝐮𝐞𝐬𝐭 𝐇𝐨𝐮𝐬𝐞), 𝐂𝐡𝐞𝐧𝐧𝐚𝐢-𝟕𝟖.

Tuesday, 11 June 2019

கொஞ்சம் மனசு
கொஞ்சும் மனசு 

Sunday, 16 September 2018

லிட்டுவின்  நூல்கண்டு

இப்போது பாரதி புத்தகாலயம் வெளியீடாக கிடைக்கிறது
விலை 20/-



Wednesday, 13 June 2018

மாய | நிலம்


   எறும்புகள் உலகம் உருவான நாளில்  ஒரு காட்டுப்பன்றி அளவில்  இருந்தன . நமது கதை நிகழும் காலத்தில் தான் உருவத்தில் சிறியதாக உருமாற்றம் அடைந்தது. இன்றும் சில பெரிய எறும்புகள் காட்டுப்பன்றி போல ஆள் அரவம் நுழையாத காடுகளில் இருப்பதாக நம்புகிறார்கள். 


  எறும்புகள் பூமியில் பெரிய துளையிட்டு பெரிய எறும்பு புற்றுகளில் வாழ்ந்தன. கிடைக்கும் தானியங்களையும் தம் வளை போன்ற புற்றுகளில் விழும் விலங்குகளையும் உண்டு வாழ்ந்தன.  

    ஒரு நாள் அந்த வழியே யானைக் கூட்டம் ஒன்று வந்தது. அதில் பல யானை குட்டிகளும் (கன்று) இருந்தன. ஒரு குறும்புக்கார யானைக் குட்டி தாறுமாறாக வந்து எறும்பு புற்றினுள் விழுந்துவிட்டது. எறும்பு புற்றில் மூச்சு முட்டியது  கால்கள் எல்லாம் மடங்கி கொண்டன சிறிது நேரத்தில் யானைக் கன்று (குட்டி) செத்துப் போனது. இதனை அறிந்த யானைக் கூட்டம் கோபத்தில் எறும்பு புற்றை மிதித்து அழித்தது. வெளியே வந்த பல எறும்புகளை மிதித்து கொன்றன. இதைச் சற்றும் எதிர்பாராத எறும்புகள் அதிர்ச்சியில் உறைந்து போய் பயத்தில் நடுங்கி மிகச் சிறியதாக மாறின.

   ஆனாலும் யானைகளின் கோபம் தீரவில்லை. யானைக் (குட்டிக்கு) கன்றுக்கு உயிர் கொடுத்து விட்டால்  யானைகளின் கோபத்தில் இருந்து எறும்பு இனத்தையே காப்பாற்றலாம் மேலும் பயத்தில் சிறியதாகிப் போன எறும்புகளின் பழைய உருவத்தைப் பெறலாம் என்று வந்து , சிவப்புப் பாறை மீது இருக்கும் எறும்பின் கதையை மரம் கூறியது. 


   இந்தக் கதையைக் கேட்ட மேகங்களில் பெரிய மேகம் ஒன்று எறும்பிடம் பேசுவதற்கு அருகில் நெருங்கி சென்றது ஆனால் எறும்பு முகத்தைத் திருப்பிக் கொண்டது. 

   மேகம் தன் முயற்சியில் பின் வங்க தயாராக இல்லை . எப்படியாவது பாட்டியின் உயிரை மீட்க வேண்டும் - சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேண்டும் என உறுதியாக இந்தது. 

   நீண்ட அமைதிக்குப் பின் எறும்பு பேசியது. 

" மேகங்கள் தான் எங்கள் இனத்தை அதிகம் அழிக்கின்றன . புற்றுகளில் பாயும் மழை வெள்ளத்தால் எண்ணிக்கை இல்லாமல் எறும்புகள் அழிகின்றன. எங்களின் பல மடங்கு உழைப்பு அழிகிறது. புற்றுகள் தான் முதலில் நிரம்புகிறது. இப்படி பட்ட உங்களுக்கு எப்படி நான் உதவ முடியும் ? " என எறும்பு வருத்தப்பட்டு கூறியது. 

  மேகம் , எறும்பின் பேச்சில் இருந்த வலியையும் வருத்தத்தையும் நியாயத்தையும்  ஏற்றுக் கொண்டது.


    மரத்தின் இலையில் இருக்கும் உயிரைத் தந்தால் ,  அதற்கு பதிலாக மழை பெய்வதற்கு முன்பாகவே மழை வருவது பற்றி அறியும் ஆற்றலைத் தருவதாகக் கூறின. இதைக் கேட்ட எறும்பு இல்லையில் உள்ள உயிரைத் தருவதாக ஒப்புக் கொண்டது. ஆனால் தங்கள் பழைய உருவத்தை எப்படி பெறுவது எனக் கேட்டது. 

   பூமியில் எந்த உயிரியும் அதன் உருவத்தை விட அதிக வலிமையாக இல்லை இப்போது நீங்கள் உங்கள் உருவத்தை விட வலிமையாக உள்ளதால் உருவத்தை மாற்றிக் கொள்ள வேண்டாம் என்றது மேகம். 

    இதைக் கேட்ட எறும்பு யோசித்தது. மரமும் இதையே வலியுறுத்தியது. இறுதியில் எறும்பு ஒத்துக் கொண்டது. உருவை விட திரு உயர்ந்ததாய் எறும்பு திரும்பி சென்றது. 

   மரத்தின் இலையைப் பெற்றுக் கொண்டு  மேகங்கள் விரைந்து சென்றன. போன வேகத்திலேயே கிழவியின் மீது இலையைப் போர்த்தின . காம்புப் பகுதி கழுத்திலும் இலையின் முழுப்பகுதி மார்பிலும் இருக்கும் படியாக பார்த்துக் கொண்டன.

  கிழவியின் இமைகள் மெல்ல அசைந்தது. உயிர் பெற்று எழுந்தாள். காகங்கள் மேகங்கள் எல்லாமே மகிழ்ச்சி அடைந்தன ஆனால் மழையில் நனைந்து நடுங்கி துடித்துக் கொண்டு இருந்த குயிலை மறந்து விட்டன. திடீரென்று குயிலின்  நிலையைப் பார்த்து பதறிப் போன மேகங்கள் வருந்தின . 

  மரத்தில் அமர்ந்து இருந்த காகங்களை அழைத்து சுள்ளிகளைச் சேர்த்துத் தீ மூட்டினான் கிழவன் கதகதப்பில் குயில் மெல்ல கண் விழித்தது.

  அருகில் சென்ற மேகங்கள் தங்களை மன்னிக்கும்படி கேட்டன. இனி எப்போதும் மழையில் நனையாத வரம் ஒன்றைக் கொடுப்பதாகவும் அதை யாரிடமாவது சொன்னால் அது கேட்பவரிடம் சென்று விடும் எனக் கூறி சென்றன. 

   இதன் பிறகு குயில் இருக்கும் இடத்தைச் சுற்றி மட்டும் மழைப் பெய்யாமல் இருக்கும் அதனால் தான் நாம் இருக்கும்  இடத்தில் ஒரு துளி மழையும் விழவில்லை எனக் கூறியது குயில். பிறகு அவள் காதில் அந்த வரத்தைக் சொல்லி  பறந்தது. 

   வானம் அப்போது தூறல் போட்டபடி இருந்தது. அவள் நடந்த போதும் அவள் மீது ஒரு துளியும் விழவில்லை.  சிறிது தூரத்திலேயே பிரசவ வலி அதிகமானது.